TNPSC Thervupettagam

கேழல்மூக்கன் தவளை

February 24 , 2024 274 days 273 0
  • தமிழ்நாடு அருகி வரும் உயிரினங்கள் வளங்காப்பு நிதியின் கீழ், உப்பிய உடல், கூர்மையான மூக்கு மற்றும் தடிமனான மூட்டுகள் கொண்ட ஒரு அரிய தவளை இனமானது பாதுகாக்கப்பட உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்தில் நாசிக்காபாட்ராக்கசு சஹ்யாட்ரென்சிஸ் மற்றும் நாசிக்கா பாட்ராக்கசு பூபதி என்ற இரண்டு வகையான ஊதா தவளை இனங்கள் (கேழல் மூக்கன்) காணப்படுகின்றன.
  • இது டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததாக நம்பப் படுகிறது.
  • செய்ஷெல்ஸ் நாட்டில் உள்ள தவளைகளின் சூக்லோசிடே குடும்பத்துடன் இது ஒன்றி இருப்பதால், இந்த ஊதா தவளை பெரும்பாலும் 'உயிர் வாழும் புதைபடிவம்' என்று அழைக்கப்படுகிறது.
  • இது கோண்ட்வானா நிலப்பரப்பு கருதுகோளுக்கு ஆதாரமாக அமைகிறது.
  • இந்த இருவாழ்வி இனம் ஆனது ஆரம்ப கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டில் IUCN அமைப்பின் செந்நிற பட்டியலில் 'அருகி வரும்' இனங்கள் பிரிவில் இருந்தது.
  • இது 2020 ஆம் ஆண்டில் ‘அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்’ என்ற பிரிவிற்கு மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்