தமிழ்நாடு அருகி வரும் உயிரினங்கள் வளங்காப்பு நிதியின் கீழ், உப்பிய உடல், கூர்மையான மூக்கு மற்றும் தடிமனான மூட்டுகள் கொண்ட ஒரு அரிய தவளை இனமானது பாதுகாக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தில் நாசிக்காபாட்ராக்கசு சஹ்யாட்ரென்சிஸ் மற்றும் நாசிக்கா பாட்ராக்கசு பூபதி என்ற இரண்டு வகையான ஊதா தவளை இனங்கள் (கேழல் மூக்கன்) காணப்படுகின்றன.
இது டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததாக நம்பப் படுகிறது.
செய்ஷெல்ஸ் நாட்டில் உள்ள தவளைகளின் சூக்லோசிடே குடும்பத்துடன் இது ஒன்றி இருப்பதால், இந்த ஊதா தவளை பெரும்பாலும் 'உயிர் வாழும் புதைபடிவம்' என்று அழைக்கப்படுகிறது.
இது கோண்ட்வானா நிலப்பரப்பு கருதுகோளுக்கு ஆதாரமாக அமைகிறது.
இந்த இருவாழ்வி இனம் ஆனது ஆரம்ப கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டில் IUCN அமைப்பின் செந்நிற பட்டியலில் 'அருகி வரும்' இனங்கள் பிரிவில் இருந்தது.
இது 2020 ஆம் ஆண்டில் ‘அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்’ என்ற பிரிவிற்கு மாற்றப் பட்டது.