நாட்டில் கை சுத்திகரிப்பான் மற்றும் முகக் கவசங்கள் போதுமான அளவில் விநியோகிக்கப் படுவதால் இவை அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 என்பதின் கீழ் இனி அத்தியாவசியப் பொருட்களாக இருக்காது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று அடுத்த 100 நாட்களுக்கு கை சுத்திகரிப்பான் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்தது.
இது கொரானா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்பத்துவதற்கான தனது முயற்சியில் இந்தப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் தடுப்பதற்காகவும் விநியோகத்தை அதிகரிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.