கைக்கருவிகள் மற்றும் மின்சாரக் கருவிகள் உற்பத்தித் துறைகள் குறித்த ஒரு அறிக்கை
April 23 , 2025 17 hrs 0 min 20 0
நிதி ஆயோக் அமைப்பானது கைக் கருவிகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பல் கருவிகள் மீதான துறைகள் குறித்த '25 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான ஒரு ஏற்றுமதித் திறனை வெளிக்கொணர்தல் - இந்தியாவின் கைக் கருவிகள் மற்றும் மின்சாரக் கருவிகள் உற்பத்தித் துறை' என்ற தலைப்பிலான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தியாவானத்து கைக் கருவிகளில் 1.8% சந்தைப் பங்கையும், மின்சாரக் கருவிகளில் 0.7% சந்தைப் பங்கையும் கொண்டு உலகச் சந்தையில் சிறியப் பங்கையே கொண்டு உள்ளது.
இருப்பினும், அடுத்த பத்தாண்டுகளில், இந்தியா மின்சாரக் கருவிகளின் ஏற்றுமதியில் 10% சந்தைப் பங்கையும், கைக் கருவிகளில் 25% சந்தைப் பங்கையும் எட்ட முடியும்.
2022 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட உலகளாவிய கருவி உற்பத்தி சந்தையானது, 2035 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்படைந்து விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைக் கருவிகளானது கைகளால் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாட்டினைச் சார்ந்து இருக்கும் மோட்டார் பொருத்தப்படாத கருவிகளைக் குறிக்கின்றன.
மின்சாரக் கருவிகள் மிக வேகமாகவும் வலுவாகவும் செயல்படுவதற்காக மின்சாரம் அல்லது மின் கலன்கள் போன்ற வெளிப்புற மூலங்களைப் பயன்படுத்துகின்றன.