TNPSC Thervupettagam

கைதிகள் விடுதலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

February 24 , 2025 3 days 37 0
  • கைதிகள் தாங்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட விண்ணப்பிக்காவிட்டாலும், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
  • சில வகையான குற்றவாளிகளுக்கான விதிவிலக்குகளுடன், BNSS மற்றும் CrPC- 1973 ஆகியவற்றின் கீழ் அந்த தண்டனை முடிவதற்குள் சில கைதிகளை விடுவிக்க வேண்டி மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு.
  • ஒரு கடும் குற்றத்தில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தைக் குறைக்கும் அதிகாரத்தினைத் தண்டனைக் குறைப்பு மீதான அதிகாரம் குறிக்கிறது.
  • BNSS சட்டத்தின் 473வது பிரிவு (மற்றும் CrPC சட்டத்தின் பிரிவு 432) மாநில அரசுகளுக்கு "எந்த நேரத்திலும்" தண்டனையை விடுவிக்கும் அதிகாரத்தினை வழங்குகிறது.
  • மாநில அரசுகளால் வழங்கப்பட்ட விடுதலையை ரத்து செய்து, பிடியாணை எதுவும் இல்லாமல் குற்றவாளியை மீண்டும் கைது செய்யலாம்.
  • அரசியலமைப்பின் 72வது மற்றும் 161வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திலிருந்து இது வேறுபட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்