கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுவதற்காக மைக்கேராசாப்ட் இந்தியாவானது அதன் ரீவேவ் திட்டத்தின் கீழ் மின்னணு வர்த்தக தளமான re-weave.in என்ற தளத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த மின்னணு வர்த்தக தளமானது கைவினைக் கலைஞர்களையும் நுகர்வோரையும் நேரடியாக இணைக்க உதவும். மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் சந்தைகளுக்கும் விரிவாக்க வேண்டி இது கைவினைக் கலைஞர்களுக்கு உதவும்.
மைக்ரோசாப்ட் ஆனது தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கைத்தறி வடிவமைப்பில் டிஜிட்டல் பயிற்சியளிப்பதற்காக CAD and Color for Handloom Weaving எனும் சிறப்பு பாடத் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
ரீவேவ் திட்டமானது மைச்ரோசாப்ட் இந்தியா (R&D) பிரைவேட் லிமிடெட்டால் அதன் மக்கள் சேவை முயற்சியின் ஒரு பகுதியாக 2016-ல் தொடங்கப்பட்டது.