பல்வேறு நாடுகளின் கைபேசி மற்றும் வீட்டு பிராட்பேண்ட் இணைய சேவைகளின் சராசரி இணைய வேகத்தை தரவரிசைப்படுத்தும் “உலகளாவிய வேக பரிசோதனை குறியீட்டின்“ (Speed Test Global Index) நவம்பர் மாத பதிப்பினை புகழ்பெற்ற இணைய வேக சோதனை சேவை நிறுவனமான ஊக்லா (Ookla) வெளியிட்டுள்ளது.
கைபேசி இணைய வேகத்தின் அடிப்படையில் 122 நாடுகளில் இந்தியா 109 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
66 Mbps சராசரி இணைய வேகத்தைக் கொண்டு கைபேசியில் அதிவேக இணைய சேவையுடைய முதல் நாடாக நார்வே உள்ளது.
பிராட்பேண்ட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 133 நாடுகளில் 76 வது இடத்தில் உள்ளது.
85 Mbps சராசரி இணைய வேகம் கொண்டு பிராட்பேண்ட் அதிக இணைய வேக சேவையுடைய முதல் நாடாக சிங்கப்பூர் உள்ளது.