TNPSC Thervupettagam

கைபேசி சொந்தமுடமையில் அதிக பாலின இடைவெளி - இந்தியா

August 8 , 2018 2176 days 631 0
  • சமீபத்தில் LIRNEAsia வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஒப்பிடக்கூடிய 18 நாடுகளில் இந்தியாவானது கைபேசி சொந்தமுடமையில் அதிக பாலின இடைவெளியைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
  • இணையத்தைப் பெண்கள் அணுகுவதில் இந்தியா மற்ற நாடுகளை விட கீழ் நிலையில் உள்ளது.
  • LIRNEAsia ஆனது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் திட்டத்தின் (ICT - Information and Communication Technology) சிந்தனைச் சாவடி ஆகும். இது 2005ஆம் ஆண்டு முதல் ஆசியா-பசிபிக்கில் ஏழைகளுக்கு ஆதரவான, சந்தைகளுக்கு ஆதரவான ஆராய்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறது.
  • இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 80 சதவீத ஆண்களிடம் கைபேசி உள்ளது. ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் 43 சதவீத பெண்களிடம் மட்டுமே கைபேசி உள்ளன. இதற்குக் காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.
  • இந்த வித்தியாசமானது இந்தியாவை பாகிஸ்தான், வங்காள தேசம் ரவாண்டா உள்பட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது பாதியளவு விஞ்சியிருக்கிறது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இந்த பாலின இடைவெளியானது கிராமப்புறங்களில் 52 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் பாலின இடைவெளியானது 34 சதவீதமாக உள்ளது.
  • இந்தியாவில் மொத்தமுள்ளவர்களில் 64 சதவீதத்தினர் இணையத்தைப் பற்றி அறியாதவர்களாக உள்ளனர். இது மற்ற நாடுகளுடன் (பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தைத் தவிர) ஒப்பிடும் போது அதிகமான சதவீதம் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் இணையப் பயன்பாடு 19 சதவீதமாகும். (நைஜுரியா, கானா, கென்யா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளை விடக் குறைவு)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்