TNPSC Thervupettagam

கைபேசி நூலகப் பேருந்துகள் - தில்லி

August 2 , 2019 1816 days 653 0
  • மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறைக்கான இணை அமைச்சர் கைபேசி நூலகப் பேருந்துகளைப் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்தப் பேருந்துகள் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் வாங்கப்பட்டுள்ளன.
  • இந்தக் கைபேசி நூலகப் பேருந்துகள் தில்லி பொது நூலகத்தின் “ஹர் ஹர் தஸ்தக் ஹர் ஹர் புஸ்தக்” என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • இத்திட்டத்தின் கீழ், தில்லி பொது நூலகமானது ஆனது தில்லி மக்களுக்கு, குறிப்பாக சேரிகள், மீள்குடியேற்ற காலனிகள் மற்றும் கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்குப் புத்தகங்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தில்லி பொது நூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் மத்திய அரசின் உதவியுடன் 1951 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தேசியக் காப்பக நூலகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்