கையகப்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுத் திட்ட விதிகள், 2024
February 15 , 2024 284 days 358 0
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கையகப்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுத் திட்ட விதிகளைத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
இத்திட்டமானது புதிய பகுதிகளின் திட்டமிட்ட மேம்பாட்டைச் செயல்படுத்துவதோடு, அடிப்படை வசதிகளை வழங்குவதோடு, உயர் ரக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிலப் பகுதிகளையும் இது திரட்டுகிறது.
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகரம் மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் (மூன்றாவது திருத்தம்) திருத்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள படி, தனிநபர் /தனி நபர்களுக்குச் சொந்தமான நிலத்தை ஒருங்கிணைத்து, அதற்கான திட்டமிடல் ஆணையம் அதை மேம்படுத்துவதற்கான வசதியினை வழங்குகிறது.
அத்தகைய மேம்படுத்தப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி மீது அந்த நிலத்தின் அசல் உரிமையாளருக்கு அணுகல் வழங்கப்படும். மீதமுள்ள பகுதி பொதுப் பயன்பாட்டு மையங்கள் மற்றும் வசதிகளை நிறுவ அல்லது விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இறுதி செய்யப்பட்ட திட்டம் ஆனது வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் நில உரிமையாளர்களுக்கு கையகப்படுத்தப்பட்ட நில உரிமைச் சான்றிதழை ஆணையம் வழங்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டில், அப்போதைய அரசாங்கம் ஆனது 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் சட்டத்தில் திருத்தம் செய்து, ‘கையகப்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது என்ற நிலையில், அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் வரைவு விதிகளை அறிவித்தது.