TNPSC Thervupettagam

கையா விண்வெளி ஆய்வுத் திட்டம்

June 22 , 2022 795 days 431 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கையா விண்வெளி ஆய்வகமானது, சமீபத்தில் பல "நட்சத்திர அதிர்வுகளை" கண்டறிந்தது.
  • அவை சுனாமி போன்ற அதிர்வுகளைப் போலவே இருந்தன.
  • நட்சத்திர அதிர்வுகள் என்பது நட்சத்திரங்களின் வடிவங்களை மாற்றுகின்ற நட்சத்திர மேற்பரப்பில் ஏற்படும் சிறிய இயக்கங்கள் ஆகும்.
  • 2013 ஆம் ஆண்டு கையா விண்வெளி ஆய்வுத் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • இது பால்வெளி அண்டத்தினைப் பற்றி ஆய்வு செய்கிறது.
  • இந்த ஆய்வுத் திட்டமானது அண்டத்தின் வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
  • இது நட்சத்திரங்கள் பற்றியும், நட்சத்திரங்களின் நிறம், வெப்பநிலை, வயது மற்றும் பிரகாச அளவு உள்ளிட்ட அவற்றின் வேதியியல் பண்புகள் பற்றிய பல புதியத் தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்