கைரேகை பகுப்பாய்வு மற்றும் குற்றவியல் கண்காணிப்பு அமைப்பு
October 9 , 2018 2240 days 758 0
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் காவல்துறை ஆணைய அலுவலகங்களிலும் புதிய கைரேகை அடையாளம் காணும் அமைப்பான FACTS 7.0 (Fingerprint Analysis and Criminal Tracing System-கைரேகை பகுப்பாய்வு மற்றும் குற்றவியல் கண்காணிப்பு அமைப்பு) என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
FACT 7.0 ஆனது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அக்டோபர் 4 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இது சென்னையின் மாநில ஆவணக் காப்பகத்தின் (SCRB - state crime records bureau’s) தரவுத்தளத்துடன் இணைக்கப்படும்.