TNPSC Thervupettagam

கொடிய போலியோ வைரஸ் 3 (WPV3) ஒழிக்கப்பட்டது

October 27 , 2019 1763 days 602 0
  • உலக போலியோ தினத்தில் (அக்டோபர் 24) உலக சுகாதார அமைப்பு  வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொடிய போலியோ வைரஸ் வகை 3 (Wild Polio Virus - WPV3) உலகளவில் ஒழிக்கப் பட்டுள்ளதாக நிபுணர்களின் சுயாதீன ஆணையம் ஒன்று அறிவித்தது.
  • பெரியம்மை மற்றும் கொடிய போலியோ வைரஸ் வகை 2 ஆகியவற்றை  ஒழித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
  • இதன் மூலம், 3 கொடிய போலியோ வைரஸ் விகாரங்களில் 2 வகைகள்  அழிக்கப் பட்டுள்ளன.
  • கொடிய போலியோ வைரஸ் வகை 1 என்ற வகையை அகற்ற முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
  • இந்த வைரஸ் ஆனது இன்னமும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் புழக்கத்தில் இருந்து வருகின்றது.
  • தனிப்பட்ட மற்றும் நோயெதிர்ப்பு ரீதியாக மூன்று வேறுபட்ட கொடிய போலியோ வைரஸ் விகாரங்கள் தற்போது உள்ளன
    • கொடிய போலியோ வைரஸ் வகை 1 (WPV1)
    • கொடிய போலியோ வைரஸ் வகை 2 (WPV2)
    • கொடிய போலியோ வைரஸ் வகை 3 (WPV3)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்