கொடைக்கானல் சூரிய ஆய்வகமானது (KSO) இந்தியாவின் மிகப் பழமையானது மற்றும் உலகின் பழமையான சூரிய ஆய்வகங்களில் ஒன்றாகும்.
ஏப்ரல் 01 ஆம் தேதியன்று, இந்த ஆய்வகமானது தனது 125வது நிறைவு நாளினைக் கொண்டாடியது.
1899 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வகம் ஆனது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அழகான மலைக்குன்றுகளின் மேல் 2100 மீ உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
இது சுமார் 1.2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிம மயமாக்கப்பட்ட சூரியப் புகைப் படங்களைக் கொண்டு சூரியனைப் பற்றிய தொடர்ச்சியான தினசரி தகவல் பதிவைக் கொண்டுள்ளது.