இந்தப் பூண்டு வகையானது, தனது மருத்துவ மற்றும் பாதுகாப்புப் பண்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றது.
இது பெரும்பாலும் வெள்ளை அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளது.
உயரமான மலை, மூடுபனி சார்ந்த நிலை மற்றும் கொடைக்கானல் மண் ஆகியவை அதன் மருத்துவப் பண்புகள் மற்றும் கெடாமல் நீண்ட நாட்கள் சேமித்து வைத்துப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்குக் காரணமாகின்றன.
தமிழ்நாட்டில் பூண்டானது காரிப் பயிர் (ஜுன் – ஜூலை) மற்றும் ராபிப் பயிர் (அக்டோபர் – நவம்பர்) வகையாக இருக்கின்றது.