கொண்டைக் கடலையின் (Cicer arietinum) ஜீன் பன்முகத் தன்மையினை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கூட்டு நிறுவனங்கள்
பகுதியளவு வறண்ட வெப்ப நிலை பகுதிக்கான இந்தியாவின் சர்வதேசப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (International Crops Research Institute for the Semi-Arid Tropics - ICRISAT)
சீனாவின் பிஜிஐ-சென்சென்.
இந்தியாவில் விளையும் கொண்டைக் கடலையின் 176 வரிசைகள் உள்ளிட்ட 429 ஜீன்களின் வரிசையாக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் நிறைவு செய்துள்ளனர்.
இந்தத் திட்டமானது பின்வரும் பண்புகளைக் கொண்ட கொண்டைக் கடலையின் புதிய இனங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிக மகசூல்
நோய் மற்றும் பூசிகளை எதிர்த்தல்
பருவநிலை மாற்றத்தை எதிர்த்தல்
கொண்டைக் கடலை என்பது உலகில் மிகப் பரவலாக வளரும் அவரை வகைகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.