1923 ஆம் ஆண்டின் பழமையான கொதிகலன்கள் சட்டத்தை மாற்றியமைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு இயற்றப் பட்ட 2024 ஆம் ஆண்டு கொதிகலன்கள் மசோதா என்பதை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
இது ஏழு குற்றங்களை குற்றவியல் தன்மையற்றதாக்குவதையும் வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை ஏற்படுத்தக் கூடிய நான்கு மிக முக்கியக் குற்றங்களுக்கான குற்றவியல் தண்டனைகள் தக்க வைக்கப்பட்டுள்ளன.
கொதிகலன்கள் உள்ள பல பகுதிகளில் பணிபுரியும் நபர்களின் பாதுகாப்பை மிகவும் உறுதிப் படுத்தவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இந்தப் புதியச் சட்டம் ஆனது ஒழுங்குமுறைகளை நவீனமயமாக்குவதையும் சமகாலப் பாதுகாப்புத் தரங்களுடன் அவற்றை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.