2024 ஆம் ஆண்டு கொதிகலன்கள்என்ற மசோதாவினை மக்களவையின் ஒப்புதலுடன் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது 1923 ஆம் ஆண்டு கொதிகலன் சட்டத்தினை ரத்து செய்கிறது.
இது கொதிகலன்களின் பயன்பாட்டினை மிக நன்கு ஒழுங்குபடுத்துவதற்கும், நீராவி கொதிகலன்கள் வெடிப்பதால் ஏற்படும் ஆபத்திலிருந்து அப்பணியாளர்களின் உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பிற்கும் வழிவகுக்க முயல்கிறது.
நாட்டில் கொதிகலன்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் போதான பதிவு மற்றும் ஆய்வு ஆகியவற்றில் சீரான தன்மையையும் இந்தச் சட்டம் வழங்குகிறது.
உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு வழி வகுக்கும் நான்கு முக்கியமான குற்றங்களுக்கு இதற்கு முந்தைய மசோதாவில் விதிக்கப்பட்டக் குற்றவியல் தண்டனைகளும் இந்தப் புதிய மசோதாவில் தக்க வைக்கப் பட்டுள்ளன.
பிற குற்றங்களுக்கு, நிதி அபராதம் விதிப்பதற்கான விதிமுறையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
1923 ஆம் ஆண்டு கொதிகலன் சட்டத்தில், மாநில அரசாங்கத்திற்கான ஒரு வரையறை எதுவும் குறிப்பிடப் படவில்லை ஆனால் தற்போதைய இப்புதிய மசோதாவில், மாநில அரசாங்கத்திற்கான வரையறை சேர்க்கப்பட்டுள்ளது.