இது 1923 ஆம் ஆண்டு கொதிகலன்கள் சட்டத்தினை (1923 ஆம் ஆண்டின் 5வது சட்டம்) ரத்து செய்கிறது.
இது 2007 ஆம் ஆண்டில் இந்தியக் கொதிகலன்கள் (திருத்தம்) சட்டம், 2007 மூலம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டது.
ஏழு குற்றங்களில், கொதிகலன்கள் மற்றும் கொதிகலன்களைக் கையாளும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேண்டி, உயிர் மற்றும் உடைமை இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நான்கு பெரிய குற்றங்களுக்கு விதிக்கப் படும் குற்றவியல் தண்டனைகளைத் தக்க வைத்துள்ளது.
மற்ற குற்றங்களுக்கு, நிதி அபராதத்திற்கான விதிமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துக் குற்றவியல் குற்றங்களுக்கும் விதிக்கப்படும் ‘அபராதம்’ ஆனது முன்பு இருந்தபடி நீதிமன்றங்களால் விதிக்கப்படுவதற்குப் பதிலாக ஒரு நிர்வாக நெறி முறையின் மூலம் விதிக்கப்படும் ‘தண்டத் தொகையாக - அபராதம்’ ஆக மாற்றப் பட்டுள்ளது.