கொத்து வெடிமருந்துகள் தொடர்பான உடன்படிக்கை- லிதுவேனியா
March 10 , 2025 24 days 50 0
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எழுந்துள்ள பாதுகாப்பு சார்ந்த கவலைகளைக் காரணம் காட்டி, லிதுவேனியா நாடானது கொத்து வெடிமருந்துகள் தொடர்பான உடன்படிக்கையிலிருந்து (CCM) அதிகாரப்பூர்வமாக விலகியது.
இந்த உடன்படிக்கையில் இருந்து விலகிய முதல் நாடு லிதுவேனியா ஆகும்.
CCM ஆனது 2008 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது (அது 2010 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது).
இது கொத்து வெடிமருந்துகளைப் பயன்படுத்துதல், பரிமாற்றுதல், உற்பத்தி செய்தல் மற்றும் சேமித்து வைப்பதைத் தடை செய்கிறது.
இந்த ஒப்பந்தத்தில் 112 நாடுகள் மற்றும் 12 பிற கையொப்பமிட்ட நாடுகள் உள்ளன.
இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.
ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.
கொத்து குண்டுகள் என்பது ஒரு பெரிய பகுதியில் பல சிறிய குண்டுகள் அல்லது வெடி மருந்துகளை வெளியிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட வெடிக்கும் ஆயுதங்கள் ஆகும்.