TNPSC Thervupettagam

கொத்து வெடிமருந்துகள் தொடர்பான உடன்படிக்கை- லிதுவேனியா

March 10 , 2025 23 days 49 0
  • ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எழுந்துள்ள பாதுகாப்பு சார்ந்த கவலைகளைக் காரணம் காட்டி, லிதுவேனியா நாடானது கொத்து வெடிமருந்துகள் தொடர்பான உடன்படிக்கையிலிருந்து (CCM) அதிகாரப்பூர்வமாக விலகியது.
  • இந்த உடன்படிக்கையில் இருந்து விலகிய முதல் நாடு லிதுவேனியா ஆகும்.
  • CCM ஆனது 2008 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது (அது 2010 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது).
  • இது கொத்து வெடிமருந்துகளைப் பயன்படுத்துதல், பரிமாற்றுதல், உற்பத்தி செய்தல் மற்றும் சேமித்து வைப்பதைத் தடை செய்கிறது.
  • இந்த ஒப்பந்தத்தில் 112 நாடுகள் மற்றும் 12 பிற கையொப்பமிட்ட நாடுகள் உள்ளன.
  • இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.
  • ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.
  • கொத்து குண்டுகள் என்பது ஒரு பெரிய பகுதியில் பல சிறிய குண்டுகள் அல்லது வெடி மருந்துகளை வெளியிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட வெடிக்கும் ஆயுதங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்