காசர்கோடு மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய தாலுக்காக்களில் உள்ள பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (ST) பிரிவான கொரகா என்ற சமூகத்தினருக்கு நிலப் பட்டா (பட்டா) வழங்குவதற்கான நடவடிக்கைகளை கேரளா தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது ஸ்மைல் நடவடிக்கை என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு, பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் தொகுப்பு நிதிப் பயன் படுத்தப் படுகிறது.
இந்த மாவட்டத்தில் உள்ள கொரகா சமூகத்தின் மக்கள் தொகை 539 குடும்பங்களில் மொத்தமாக 1,706 பேர் ஆகும்.
ஸ்மைல் நடவடிக்கையானது கிராமப் பஞ்சாயத்து அமைப்பு, பழங்குடியினர் நிர்வாக விரிவாக்க அமைப்புகள் மற்றும் கிராம அலுவலகங்களில் இருந்து மதிப்பீட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள், அத்துடன் அந்தச் சமூகத்தினைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்களை உள்ளடக்கியது.