TNPSC Thervupettagam

கொரிய நாடுகளின் மாநாடு

May 6 , 2018 2299 days 697 0
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜாயே-இன் ஆகிய இருவரும் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களிலிருந்து விடுபடச் செய்வதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • கொரிய நாடுகளுக்கிடையேயான மாநாடுகள் ஆனது இரு கொரிய நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு ஆகும். இது வரையில் இரு கொரிய நாடுகளின் தலைவர்களுக்கிடையே மூன்று முறை (2000, 2007 மற்றும் 2018) சந்திப்பு நடைபெற்றுள்ளது. தென்கொரியாவின் பகுதியான கூட்டு பாதுகாப்புப் பகுதியில் (Joint Security Area) ஏப்ரல் 27, 2018 அன்று நடைபெற்ற, கொரிய நாடுகளுக்கிடையேயான மாநாடு ஆனது இந்த இரு நாடுகளுக்கிடையேயான மூன்றாவது மாநாடு ஆகும்.
  • 1953 ஆம் ஆண்டு கொரியப் போர் முடிவடைந்ததிலிருந்து தென் கொரியாவிற்கு வருகை தந்த முதல் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆவார்.
  • இந்த சந்திப்பானது 1953-ல் கொரியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் (Armistice Agreement) பிறகு இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான மூன்றாவது சந்திப்பாகும். இம்மாநாடு முதல்முறையாக தென் கொரியாவில் நடைபெற்றது.
  • 1953ல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக இருநாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்
  • பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கொரிய நாடுகளுக்கிடையேயான முதல் மாநாட்டின் ஒரு பகுதியாக இரு கொரியத் தலைவர்களும் இராணுவ நடவடிக்கையல்லாத பகுதியில் (Demilitarised Zone) பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மாநாடு கொரியத் தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது மற்றும் இரு கொரிய நாடுகளுக்கிடையேயான நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டு இரு நாடுகளுக்கிடையே முறைப்படி போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதென, கிம் ஜாங் உன் மற்றும் மூன் ஜாயே ஆகிய இருவரும் அமைதி இல்லத்தில் (Peace House) மூன்று பகுதி பிரகடனத்தில் கையெழுத்திட்டு உறுதியேற்றுள்ளனர். (Three Part Declaration)
  • இந்தப் பிரகடனம் கொரிய நாடுகள், வடகொரியாவின் காயேசோங்கில் தகவல் தொடர்பு அமைப்பை நிறுவவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் தமது பணியைத் தொடரும் எனத் தெரிவிக்கிறது. இந்த இரு கொரிய நாடுகளும் ஆகஸ்ட் 15 அன்று குடும்பங்களை மீண்டும் இணைத்தல் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. (Family Reunion).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்