ஜெர்மனியில் உள்ள ராபர்ட் கோச் நிறுவனம் மற்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளின் உலகளாவிய பரவலைக் கணிப்பதற்காக ஒரு கணித மாதிரியை நிறுவியுள்ளனர்.
இந்தத் தரவரிசை முறையில் இந்தியா 17வது இடத்தில் இருக்கின்றது.
கேரளாவில் இதுவரை மூன்று கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்களாவர்.
விமானப் பயணத்தின் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதாக இந்த ஆய்வு கூறுகின்றது.
விமானப் பயணத்தின் போது தாய்லாந்து நாட்டிற்கு (தரவரிசையில் முதலிடம்) அதிக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. இதன் பாதிப்பு 2.1% ஆக இருந்தது.