TNPSC Thervupettagam

கொரோனா வைரஸ் – தொற்றுநோய்

March 13 , 2020 1626 days 610 0
  • உலக சுகாதார நிறுவனமானது (World Health Organization WHO) பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை ‘தொற்றுநோய்’ என்று அறிவித்துள்ளது.
  • முன்னதாக, ஜனவரி 30 ஆம் தேதியன்று WHO ஆனது இந்த வைரஸ் பாதிப்பை "சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலை" என்று அறிவித்தது.
  • கோவிட் - 19 என்பது ஒரு சுவாச நோய்த் தொற்று நோயாகும்.
  • கோவிட் - 19 என்பது உலக சுகாதார அமைப்பால் இந்த வைரஸுக்கு வழங்கப்பட்ட ஒரு அதிகாரப் பூர்வப் பெயராகும்.
  • WHO அதிகாரப் பூர்வமாக இந்த வைரஸுக்குப் பெயரிடுவதற்கு முன்பு, இது கொரோனா வைரஸ், புதிய வகை கொரோனா வைரஸ் மற்றும் 2019 - nCOV (வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆண்டைக் குறித்தல்) என்றும் குறிப்பிடப் பட்டது.

நோய் வெடிப்பு, கொள்ளை நோய் மற்றும் தொற்று நோய்

  • நோய் வெடிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நோய் பாதிப்பானது திடீரென உயரும் நிகழ்வு என்று புரிந்து கொள்ளப் படுகின்றது.
  • வட்டார நோய் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையினரிடையே அல்லது பிராந்தியத்தில் எப்போதும் இருக்கும் ஒரு நோயாகும்.
  • கொள்ளை நோய் என்பது ஒரு மிகப்பெரிய நோய் வெடிப்பாகும். இது அதிக எண்ணிக்கையிலான மக்களை ஒரே நேரத்தில் தாக்குகின்றது மற்றும் ஒன்று அல்லது பல சமூகங்கள் வழியாகப் பரவும் தன்மை கொண்டது.
  • ஒரு தொற்றுநோய் என்பது “ஒரு புதிய நோயின் உலகளாவிய பரவல்” ஆகும்.
  • ஒரு நோயைத் தொற்றுநோய் என வகைப்படுத்துவதற்கு அந்த நோய் பரவிய நாடுகளின் குறிப்பிட்ட எண்ணிக்கை என்ற எந்த வரையறையும் WHO அமைப்பிற்கு இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்