கொரோனிவியா வேளாண் கூட்டுப் பணிக்கு (KJWA) இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தக் கட்டமைப்பின் கீழ் ஒரு முக்கிய முடிவாகும்.
கொரோனிவியா வேளாண் கூட்டுப் பணி வேளாண் துறையில் இருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வினைக் குறைக்க முயல்கிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வேளாண் துறையின் தனித்துவமானத் திறனை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மண், ஊட்டச்சத்துப் பயன்பாடு, கால்நடைகள், நீர், வேளாண் துறையில் ஏற்பு மற்றும் சமூக-பொருளாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு சார்ந்த பரிமாணங்களை அளவிடும் முறைகள் ஆகிய ஒன்றோடொன்று தொடர்புடைய 6 துறைகளுக்கான தீர்வினைக் குறிப்பிடுகிறது.
வேளாண் துறைகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள் "ஆடம்பர வாழ்க்கை சார்ந்த" உமிழ்வுகள் அல்ல, அது ஏழைகள் "உயிர் பிழைப்பதற்கான முயற்சியில் வெளியாகும் உமிழ்வுகள்" என்று இந்தியா கூறுகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகள் உலகிற்கு 790 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைட் அளவிலான கார்பன் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது என்று இந்தியா சுட்டிக் காட்டியது.
ஒரு டன்னுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற மிதமான விலையில் நிர்ணயத்தில் கூட இது சுமார் 79 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.
உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், தொழில் துறைக்கு முந்தையக் காலத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையில் தெற்காசியா வெளியிட்ட மொத்த கார்பன் உமிழ்வு 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இந்தியாவின் தனிநபர் வருடாந்திர உமிழ்வுகள் உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
முழு உலகமும் இந்திய நாட்டின் போலவே தனிநபர் உமிழ்வு அளவில் கார்பனை வெளியேற்றினால், பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்.