கொலம்பியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் மற்றும் முன்னாள் நகரத் தலைவரான கொகோடா கஸ்டாவோ பெட்ரோவினை 54 சதவிகித வாக்குகளைப் பெற்று பழமைவாத வேட்பாளர் இவான் டியூக் தோற்கடித்துள்ளார்.
டியூக்-ன் இணைப் போட்டியாளர் கொலம்பியாவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இது கொலம்பியாவின் ஆயுதமேந்தியப் புரட்சிப்படையினுடனான 2016 அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு நடத்தப்படும் முதல் தேர்தலாகும்.
டியூக் ஒரு சமூகப் பழைமைவாதி ஆவார். இவர் ஒருபால் திருமணம், கருணைக் கொலை மற்றும் மருந்துகளுக்கானக் குற்றவிலக்கினை எதிர்ப்பவர் ஆவார். இவர் கொலம்பியாவின் இளம்வயது தலைவராக உள்ளார்.