முதல் கொள்கை வகுப்பாளர்கள் மன்றம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, இந்திய மருந்தியல் இயங்கலை தளம் மற்றும் பாதகமான மருந்து எதிர்வினை கண்காணிப்பு அமைப்பு (ADRMS) மென்பொருள் ஆகியவை வெளியிடப் பட்டன.
அவை சுகாதாரத் தரங்களை எண்ணிம மயமாக்குவதையும் மருந்துகளின் மீதான பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மருந்தியல் இயங்கலை தளம் என்பது இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரும் மருந்து தரநிலைகளை அணுகுவதை மிக எளிதாக்குகின்ற ஒரு புதிய எண்ணிம மூலமாகும்.
மருந்துகள் மற்றும் மருத்துவச் சாதனங்களில் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளைக் கண்காணிக்க ADRMS உதவும்.
இது நாட்டிலேயே இதுபோன்ற முதல் வகையிலான வசதிகள் ஆகும் என்பதோடமேலும் பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் நேரடியாகப் பிரச்சினைகள் குறித்து புகாரளிக்க வழி வகை செய்கிறது.