இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது நாட்டில் உள்ள குடிமக்களின் உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு நடத்தியது.
அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் அதிக கொழுப்பை உட்கொள்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள பெருநகரங்களில், தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்வதில் முன்னிலையில் உள்ளன.
36 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவை அதிக அளவில் உட்கொள்கின்றனர் மற்றும் குறைந்த அளவாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவை குறைந்த அளவில் உட்கொள்கின்றனர்.
"நமது உலகத்தை மாற்றியமைத்தல்: நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் - 2030" என்ற தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவது என்பது நீடித்த வளர்ச்சி இலக்குகளின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாகும்.