TNPSC Thervupettagam

கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டு (CSC) கட்டமைப்பு

August 2 , 2023 353 days 233 0
  • இந்தியா, வங்காளதேசம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடல்சார் அறிவியலாளர்களின் கூட்டு ஆய்வுப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
  • இது கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டின் (CSC) பிராந்தியக் கட்டமைப்பின் கீழ் இந்தியத் தேசியக் கடல்சார் தகவல் சேவைகள் மையத்தினால் (INCOIS) ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்தியப் பெருங்கடலின் பிராந்தியச் சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணித்து அவற்றைக் கையாளச் செய்வதற்கான கடல்சார் தரவுச் சேகரிப்புடன், கடல்சார் பகுதி கண்காணிப்பு மற்றும் சேவைகள் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டினை கட்டமைக்கச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டு (CSC) கட்டமைப்பின் கீழ் முதல் முறையாக மேற் கொள்ளப் பட்ட ஆய்வுப் பயணம் என்பதால், ORV சாகர் நிதி கப்பலில் மேற்கொள்ளப் பட்ட இந்தப் பயணமானது தனித் தன்மை வாய்ந்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்