இந்தியா, வங்காளதேசம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடல்சார் அறிவியலாளர்களின் கூட்டு ஆய்வுப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இது கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டின் (CSC) பிராந்தியக் கட்டமைப்பின் கீழ் இந்தியத் தேசியக் கடல்சார் தகவல் சேவைகள் மையத்தினால் (INCOIS) ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்தியப் பெருங்கடலின் பிராந்தியச் சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணித்து அவற்றைக் கையாளச் செய்வதற்கான கடல்சார் தரவுச் சேகரிப்புடன், கடல்சார் பகுதி கண்காணிப்பு மற்றும் சேவைகள் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டினை கட்டமைக்கச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டு (CSC) கட்டமைப்பின் கீழ் முதல் முறையாக மேற் கொள்ளப் பட்ட ஆய்வுப் பயணம் என்பதால், ORV சாகர் நிதி கப்பலில் மேற்கொள்ளப் பட்ட இந்தப் பயணமானது தனித் தன்மை வாய்ந்ததாகும்.