கோஃபி அன்னான் சேஞ்ச்மேக்கர்ஸ் 2021 என்ற முன்னெடுப்பிற்காக உலகின் 12 தனித்துவமிக்க இளம் தலைவர்களுள் ஒருவராக செய்னோரின் ஸ்டீபன் அங்க்காங்க் (Zeinorin Stephen Angkang) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் ஜெனீவாவிலுள்ள கோஃபி அன்னான் பவுண்டேசனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மணிப்பூரின் உக்ரூல் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது பெண்மணியாவார்.
மணிப்பூரிலுள்ள தங்குல் நாகா பழங்குடியின விவசாயிகளுடனான இவரது ஈடுபாட்டிற்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.