கோக்போராக் மொழிப் பிரச்சினையானது, கோக்போரோக் மொழிக்குப் பயன்படுத்தப் பட்ட எழுத்து வடிவினை சார்ந்ததாக உள்ள நிலையில் இது திரிபுராவில் பல தசாப்தங்களாக விவாதத்திற்கு உரியதாக உள்ளது.
கோக்போராக் மொழிக்காக வங்காளம் மற்றும் ரோமானிய எழுத்துகள் அதில் பெரும் அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
ரோமானிய எழுத்து வடிவப் பயன்பாட்டிற்கான கோரிக்கை சமீபத்திய ஆண்டுகளில் உத்வேகம் பெற்றுள்ளது.
கோக்போராக் மொழியானது வங்காள மொழியுடன் சேர்த்து திரிபுராவின் அதிகாரப் பூர்வ மொழிகளில் ஒன்றாக உள்ளது.
இது வடகிழக்கு இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் சுமார் 1 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு சீன-திபெத்திய மொழியாகும்.
இது திரிபுராவில் பேசப்படும் பல பேச்சுவழக்கு மொழிகளுடன் ஒப்பீட்டளவில் ஒன்றி இருக்கும் மொழியாகும்.
இது திரிபுராவின் 19 பழங்குடியினச் சமூகங்களில் பெரும்பாலானவற்றின் இணைப்பு மொழியாகும்.