பீகாரின் கோசி மெச்சி உள் மாநில நதிநீர் இணைப்புத் திட்டத்திற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது.
இது பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா - துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பலன்கள் திட்டத்தின் (PMKSY-AIBP) கீழ் சேர்க்கப்படும்.
இந்தத் திட்டம் ஆனது பீகாரில் உள்ள மகாநந்தா நதிநீர்ப் படுகைக்கு நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்துவதற்காக வேண்டி கோசி ஆற்றின் உபரி நீரின் ஒரு பகுதியைத் திருப்பி விடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேளாண்மையில் நீர் அணுகலை மேம்படுத்துவதற்கும், உறுதியான நீர்ப்பாசனத்தின் கீழ் சாகுபடி செய்யக்கூடியப் பகுதியை விரிவுபடுத்துவதற்காகவும், வேளாண்மையில் நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காகவும் என 2015-16 ஆம் ஆண்டில் PMKSY திட்டம் தொடங்கப்பட்டது.