கோடீஸ்வரர்களின் வருடாந்திரச் செல்வ வளம் - ஆக்ஸ்பாம் அறிக்கை
January 29 , 2025 25 days 62 0
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்ட செல்வ வளங்களை “Takers, Not Makers” என்று தலைப்பிடப் பட்ட ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அறிக்கை எடுத்துரைக்கிறது.
1765 மற்றும் 1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இங்கிலாந்து நாடானது இந்திய நாட்டில் 64.82 டிரில்லியன் டாலர் பணத்தைச் சுரண்டியது என்ற நிலையில் அதில் 33.8 டிரில்லியன் டாலர் முன்னணியில் இருந்த 10% பேருக்கு சென்றது.
1750 ஆம் ஆண்டில், இந்தியாவானது உலகளாவியத் தொழில்துறை உற்பத்தியில் 25% பங்கினைக் கொண்டிருந்தது, ஆனால் 1900 ஆம் ஆண்டில் இது 2% ஆகக் குறைந்தது.
ஆனால் 2024 ஆம் ஆண்டில், கோடீஸ்வரர்களின் செல்வ வளம் 2023 ஆம் ஆண்டினை விட மூன்று மடங்கு வேகமாக அதிகரித்தது.
3.5 பில்லியனுக்கும் மிக அதிகமான மக்கள் ஒரு நாளைக்குச் சுமார் 6.85 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வெகு நாட்களாக வாழ்கின்றனர்.
பணக்காரர்களில் 1% பேர் தற்போது உலக மக்கள்தொகையில் 95 சதவீதம் பேரை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளனர்.