TNPSC Thervupettagam

கோதாவரி-காவிரி நதி இணைப்புத் திட்டம்

August 2 , 2023 482 days 412 0
  • கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு நடவடிக்கை என்பது, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒருமித்தக் கருத்தை எட்டுவதைப் பொறுத்தே அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இதில் உள்ள “சம்பந்தப்பட்ட மாநிலங்கள்” என்ற சொல்லானது புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தோடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இது கோதாவரி ஆற்றின் உபரி நீரைத் தெலுங்கானா மாநிலத்தின் கரீம்நகர் என்ற மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி என்ற அணையிலிருந்து காவிரி நதியில் கலக்கச் செய்வதற்காக தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கல்லணைக்கு அனுப்பும் திட்டமாகும்.
  • இது கோதாவரி (ஈஞ்சம்பள்ளி)-கிருஷ்ணா (நாகார்ஜுன சாகர்); கிருஷ்ணா (நாகார்ஜுன சாகர்)-பெண்ணாறு (சோமசிலா) மற்றும் பெண்ணாறு  (சோமசிலா) – காவிரி (கல்லணை) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்