TNPSC Thervupettagam

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள்

August 29 , 2022 691 days 338 0
  • கோதுமை அல்லது மெஸ்லின் மாவுப் பொருட்களின் மீதான விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி கோதுமை அல்லது மெஸ்லின் மாவு ஏற்றுமதிக்கு சிலக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முடிவு செய்து உள்ளது.
  • நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மே மாதம் முதல் கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது.
  • இருப்பினும், இது வெளிநாடுகளில் கோதுமை மாவுக்கான தேவையை அதிகரித்தது.
  • இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் கோதுமை மாவு ஏற்றுமதியானது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூலை ஆகிய காலங்களில் 2021 ஆம் ஆண்டின் இதே கால கட்டத்தினை ஒப்பிடுகையில் 200 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் இந்தியா 246 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோதுமை மாவை ஏற்றுமதி செய்தது.
  • இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் ஏற்றுமதி சுமார் 128 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்