மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை (Union Minister of Petroleum & Natural Gas) அமைச்சரான தர்மேந்திர பிரதான் ஒடிஸா மாநிலத்தின் கோனார்க் சூரிய கோவிலில் (Konark Sun Temple) உலகத் தரத்திலான விளக்க மையம் (world-class Interpretation Centre) மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை (tourist facilities) தொடங்கி வைத்துள்ளார். இந்தத் தொடக்கமானது ஒடிஸா மாநிலத்தின் உத்கல் திவாஸ் (Utkal Divas) கொண்டாட்டத்தின்போது தொடங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் காணொளி (visual) மற்றும் கேட்பொலி (audio) அமைப்புகளையுடைய ஓர் கலையரங்கத்தைக் கொண்ட நடப்பு நிலை தொழில்நுட்பத்திலான சுற்றுலாப் பயணிகள் வசதிபாட்டு மையத்தை இந்திய எண்ணெய் அறக்கட்டளை (Indian Oil Foundation-IOF) உருவாக்கியுள்ளது.
இந்தியன் எண்ணெய் கழக (Indian Oil Corporation) நிறுவனத்தினால் முழுவதும் நிதியளிக்கப்படுகின்ற மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற ஓர் இலாப நோக்கமற்ற அறக்கட்டளையே இந்திய எண்ணெய் அறக்கட்டளை ஆகும்.