TNPSC Thervupettagam

கோபர்தான் யோஜனா

April 12 , 2018 2422 days 1137 0
  • மத்திய அரசு 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்திலிருந்து தேசிய அளவில் கோபர்தான் அல்லது விவசாயத்தின் கரிம-உயிரி மூலங்களைத் தூண்டுதல் (Galvanising Organic Bio Agro Resources) எனப் பொருள்படும் மத்திய அரசுத் திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறது.

  • அரசு இந்த நிதியாண்டில் (2018-2019) ஏறக்குறைய 700 மாவட்டங்களை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டம் தீட்டுகிறது.
  • இந்தத் திட்டம் விவசாயப் பண்ணைகள் மற்றும் நிலங்களில் இருந்து திடக்கழிவுகள் மற்றும் பசு சாணங்களை உபயோகமுள்ள உரம், உயிரி எரிவாயு (Bio Gas) மற்றும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (Bio - CNG) போன்ற பொருட்களாக மாற்றுவதற்கு கவனம் செலுத்துகின்றது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் கிராமங்களில் உள்ள வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 60: 40 என்ற விகித அளவில் நிதியினை ஒதுக்கும்.
  • இந்தியாவைப் போன்ற 3 மில்லியன் டன்னிற்கும் அதிகமான சாணத்தை வழங்குகின்ற, ஏறக்குறைய 300 மில்லியன்கள் என்ற எண்ணிக்கையில், உலகிலேயே அதிக அளவு மாடுகளைக் கொண்டுள்ள நாட்டிற்கு இந்தத் திட்டம் மிகவும் பயனளிக்கும் திட்டமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்