2023 ஆம் ஆண்டு ஜூன் 08 ஆம் தேதியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் ஓர் அங்கமான கோபர்நிகஸ் எனப்படும் புவிக் கண்காணிப்புத் திட்டத்தின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
முன்னதாக சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் திட்டத்திற்கான ஒரு உலகளாவியக் கண்காணிப்பு (GMES) அமைப்பு என அறியப்பட்ட இது 1998 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
வேளாண்மை, பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பல துறைகளுக்கு உதவச் செய்வதற்காக என்று பூமியின் சுற்றுச்சூழலைப் பற்றியத் தகவல்களை வழங்கும் வகையில் கோபர்நிகஸ் வடிவமைக்கப் பட்டுள்ளது.
சூரியனை மையமாகக் கொண்ட பிரபஞ்ச மாதிரியை முதன்முதலில் முன்மொழிந்த 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போலந்து நாட்டினைச் சேர்ந்த நிக்கோலஸ் கோபர் நிகஸின் நினைவாக இந்தத் திட்டத்திற்கு இப்பெயரிடப்பட்டது.