ஒடிஸா மாநில அரசானது இதழியலாளர்களுக்காக கோபாபந்து சம்பதிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா (Gopabandhu Sambadika Swasthya Bima Yojana) எனும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை துவங்கியுள்ளது.
மாநிலத்தின் அனைத்து வேலை செய்யும் இதழியலாளர்களுக்கும் வருடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் சுகாதார காப்பீட்டை வழங்குகின்ற திட்டமாகும்.
ஒடிஸாவின் முக்கிய சமூக ஆர்வலர், சீர்திருத்தவாதி, அரசியல் ஆர்வலர், இதழியலாளர், கவிஞர், கட்டுரையாளரான கோபால் பந்து தாஸ் என்பவரின் பெயர் கொண்டு இத்திட்டத்திற்கு கோபாபந்து சம்பதிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஒடிஸாவின் கலை, கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பினை வழங்கியதால் இவர் ஒடிஸாவின் ஆபரணம் (jewel of Odisha) எனப் பொருள்படும் உத்கல்மணி (Utkalmani) எனும் அடைமொழி கொண்டு (epithet) அழைக்கப்படுகின்றார்.
1910-களில் இவர் மக்களுக்கு கல்வியை வழங்குவதற்காக சத்யபாதி (Satyabadi) எனும் மாதாந்திர இலக்கிய இதழை தொடங்கினார்.