பாதகமான வானிலை மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இருளினால் ஏற்படும் இடையூறுகளின் காரணமாக ஈரானின் வேண்டுகோளின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் தனது அவசர செயற்கைக்கோள் வரைபடமாக்கல் சேவையைச் சமீபத்தில் செயல்படுத்தியது.
விரைவானத் தகவல் அளிப்பு வரைபடமாக்கல் தொழில்நுட்பம் என்பது கோபர்நிகஸ் திட்டத்தில் உள்ள அவசர மேலாண்மை சேவையின் (EMS) முக்கிய அங்கமாகும்.
15 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற அறிவியலாளர் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் அவர்களின் நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டது.
இந்தத் திட்டம் ஆனது ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி முன்னெடுப்பின் புவிக் கண்காணிப்பு கூறு ஆகும்.
1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோப்பர்நிகஸ் திட்டம் முன்னர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் திட்டத்திற்கான உலகளாவிய கண்காணிப்புத் திட்டம் (GMES) என அறியப்பட்டது.
இத்திட்டமானது பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை மற்றும் வேளாண்மை போன்ற பிற பயன்பாடுகளுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வேண்டி செயற்கைக் கோள்கள் மற்றும் நிலக் கட்டுப்பாடுகள் அடிப்படையிலான, வான்வழி மற்றும் கடல் சார் அளவீட்டு அமைப்புகளின் உலகளாவிய தரவுகளைப் பயன்படுத்தச் செய்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், கோப்பர்நிக்கஸ் திட்டத்திலிருந்துப் பெறப்படும் தரவுகள் இலவசமாகவும், அனைவரும் அணுகக்கூடிய வகையில் கிடைக்கப் பெறுகிறது.