TNPSC Thervupettagam

கோமாரி நோய் பாதிப்பில்லாத மண்டலங்கள்

September 6 , 2024 32 days 120 0
  • எட்டு மாநிலங்களில் கோமாரி நோய் பாதிப்பில்லாத மண்டலங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • அவை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியனவாகும்.
  • இது இந்திய விலங்குப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தச் செய்வதையும், நாட்டின் உலகளாவியச் சந்தை இருப்பை நன்கு மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கோமாரி நோய் என்பது காட்டு மற்றும் வளர்ப்பு விலங்குகள், குறிப்பாக கால்நடைகள், பன்றிகள் மற்றும் செம்மறி ஆடுகளைப் பாதிக்கும் அதிகத் தொற்றுத் திறன் மிக்க ஒரு வைரஸ் நோயாகும்.
  • இந்த வைரஸ் நோய், கால்நடைகளின் கால் மற்றும் வாயில் காயங்களை ஏற்படுத்தி, கால்நடைகளுக்கு காய்ச்சல் ஏற்படச் செய்வதோடு இந்த நோய்ப் பாதிப்புள்ள கால் நடைகள் தீவனத்தை உட்கொள்ளாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்