வட மேற்குத் தொடர்ச்சி மலையில், டயட்டம் எனப்படும் ஒற்றை செல் ஆல்காவின் புதிய இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு ஒரு மூத்தப் புவிசார் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான மறைந்த பேராசிரியர் S.N. ராஜகுருவின் நினைவாக கோம்போநிமா இராஜகுருயி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது மகாராஷ்டிராவின் மலைப்பிரதேசமான மஹாபலேஷ்வரின் ஈரமான சுவர்களில் உள்ள பகுதியளவு நீர் நிறைந்த சூழலில் காணப்பட்டது.
இது கோம்போமா மற்றும் கோம்ஃபோனிஸ் ஆகிய இரண்டு வகை உயிரிகளின் பண்புகளையும் வெளிப்படுத்துவதால், இது டயட்டம் என்ற வகை பிரிப்பில் குறிப்பிடத் தக்கச் சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது.
ஒளிச்சேர்க்கை மூலம் வளிமண்டலத்திற்கு ஆக்ஸிஜனை வழங்கச் செய்வதன் மூலம் டயட்டம்கள் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றன.