கோயம்பத்தூர் இரயில் நிலையமானது இந்தியப் பசுமை கட்டிடக் கழகத்திடமிருந்து (Indian Green Building Council - IGBC) பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது.
இந்த நிலையிலான பசுமைச் சான்றிதழைப் பெற்ற தெற்கு இரயில்வேயின் ஒரே இரயில் நிலையமும், 6வது இந்திய இரயில் நிலையமும் இதுவே ஆகும்.
கோயம்பத்தூர் தவிர, IGBC அமைப்பின் பிளாட்டினம் தரச் சான்றிதழைப் பெற்றுள்ள மற்ற 5 இரயில் நிலையங்கள் செகந்திராபாத், புதுடெல்லி, ஜெய்ப்பூர், விசாகப் பட்டினம் மற்றும் அசன்சோல் ஆகியனவாகும்.
இந்திய இரயில்வேயின் சுற்றுச்சூழல் இயக்குநரகத்தின் ஆதரவோடு ‘பசுமை இரயில் நிலையத் தரநிலை முறையினை’ IGBC உருவாக்கியது.
இது இரயில் நிலையங்கள் பசுமைக் கருப்பொருட்களை ஏற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்கானதாகும்.
நிலையச் செயல்பாடு மற்றும் மேலாண்மை காரணமாக ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதில் இது உதவும்.