TNPSC Thervupettagam

கோயில் நுழைவு குறித்து சென்னை உயர்நீதிமன்றம்

February 2 , 2024 297 days 413 0
  • இந்துக்கள் அல்லாதவர்கள் கோயில்களின் கொடிமரத்திற்கு அப்பால் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்பதைக் குறிக்கும் பலகைகளைக் கோயில்களின் நுழைவாயிலில் உள்ள கொடிமரம் அருகே நிறுவுமாறு மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்து அல்லாத ஒருவர் கோயிலில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைத் தரிசிக்க விரும்பினால், அதிகாரிகள் அவருக்கு தெய்வத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், இந்து மதம் மற்றும் கோயிலின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்றும் அந்த நபரிடமிருந்து உறுதிமொழி பெறுவார்கள்.
  • அத்தகைய உறுதிமொழியின் அடிப்படையில் இந்து அல்லாத ஒருவர் நுழைய அனுமதிக்கப் படும் போதெல்லாம், அந்த உறுதிமொழி கோயில் நிர்வாகத்தினால் பராமரிக்கப் படும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • மதத்தில் நம்பிக்கை இல்லாத இந்துக்கள் அல்லாதவர்களைக் கொடிமரத்திற்கு அப்பால் அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்