வருவாய் நிறைந்த கோயில்களின் உபரி நிதியை, 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை (HR&CE) சட்டத்தின் 36A, 36B மற்றும் 66(1)(a) முதல் (l) வரையிலான பிரிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள சில நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிக வருமானம் கொண்ட கோயில்களின் உபரி நிதியை, மிக குறைந்த வருமானம் கொண்ட கோயில்களுக்கு உதவி வழங்குதல், மதக் கோட்பாடுகளைப் பரப்புதல், வேதப் பள்ளிகளை நிறுவச் செய்தல், நுண்கலைகளை நன்கு ஊக்குவித்தல், இந்து குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் இல்லங்களை நிர்வகித்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
மாறாக, உபரியை வணிக வளாகங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடாது.
வணிக வளாகம் ஆனது, அதன் 66வது பிரிவின் (1)வது துணைப் பிரிவின் (a) முதல் (l) வரையிலான துணைப் பிரிவுகளின் வகையிலோ அல்லது 36A மற்றும் 36B பிரிவுகளின் இனங்களில் வராததால், வணிக வளாகம் கட்டும் முடிவை ரத்து செய்து ஒதுக்கி வைக்க வேண்டும்.