ஈரானிய புரட்சிகர காப்பாளர் (Iran’s Revolutionary Guard) அமைப்பானது கோர்ராம் ஷாஹ்ர் எனும் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் (Ballistic) ஏவுகணையை முதன்முறையாக பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கும் அளவில் 2000 கிலோமீட்டர் தூர வரம்புடையது இந்த ஏவுகணை.
1980களில் நடைபெற்ற ஈரான்-ஈராக்கிய போரின் நினைவு தின அனுசரிப்பின் போது இராணுவ அணிவகுப்பில் இந்த ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.