TNPSC Thervupettagam

கோலம் பழங்குடியினர்

January 26 , 2024 175 days 205 0
  • மத்திய அரசானது, ஜன் ஜாதி ஆதிவாசி நியாய் மகா அபியான் திட்டத்தின் கீழ், அழிந்து வரும் கோலம் பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தி உள்ளது.
  • அவர்கள் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவாக (PVTG) பட்டியலிடப் பட்டுள்ளனர்.
  • உள்ளூர் ஆரம்பச் சுகாதார நிலையங்களை (PHCs) வலுப்படுத்துவதன் மூலமும் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலமும் கிராமங்களில் வசிக்கும் இந்த பழமையான பழங்குடியினக் குழுக்களின் உடல்நலம் மற்றும் கல்வியில் இது கவனம் செலுத்தும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், மண்டலத் தலைமையகத்தில் இருந்து இந்த கிராமங்களுக்கு சாலை இணைப்பு மேம்படுத்தப்படும்.
  • உள்ளூர் சாலைகளை மேம்படுத்துதல், குடிநீர் வழங்குதல், மின்சாரம் அல்லது சூரிய ஆற்றல், மற்றும் LPG எரிவாயு அடுப்புகள் மற்றும் கொள்கலன்களை வழங்குதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்துகிறது.
  • கோலம்போலி, குல்மே மற்றும் கொல்மி என அழைக்கப்படும் கோலம் பழங்குடியினர் மத்தியப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • இந்தப் பழங்குடியினக் குழுக்கள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பட்டியலிடப் பட்டுள்ளனர் என்பதோடு இந்தக் குழுவினர் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்