TNPSC Thervupettagam

கோலா கரடியின் மரபணுத் தொகுதி வரைபடம் கண்டுபிடிப்பு

July 7 , 2018 2332 days 916 0
  • 54 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட சர்வதேசக் குழு வயிற்றுப் பகுதியில் குட்டியைக் காக்கும் கோலா கரடியின் முழு மரபணுத் தொகுதி வரைபடத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த முழு மரபணுத் தொகுதியானது 26,000 மரபணுக்களைக் கொண்டுள்ளது.
  • ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட மரபணு குடும்பத்திற்குள்ளேயே (P450 மரபணு) பெருக்கமடைவதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மரபணுக்கள் யூக்கலிப்டஸ் தழைகளில் உள்ள நச்சுப் பண்பை கோலா கரடி மூலம் நீக்குவதற்கு உதவுகிறது.
  • கோலா கரடி வயிற்றுப் பகுதியில் உள்ள இளம் குட்டியைக் காக்க பாலூட்டும் புரதங்கள் பயன்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த புரதங்கள் மூலம் வலுவான எதிர்ப்பு சக்தியை இந்த இளம் குட்டிகள் பெறும்.
  • கோலா பாஸ்கோலாக்டோஸ் சினரிஸ் அல்லது பொதுவாக, கோலா கரடியானது ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட, வயிற்றுப் பகுதியில் குட்டியைக் காக்கும் குணமுடைய மரங்களில் வாழும் தாவர உண்ணியாகும்.
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமானது (IUCN - International Union for Conservation of Nature) வாழ்விட இழப்பு மற்றும் பரவலான நோய்களின் காரணமாக கோலா கரடியை ‘மறையத்தகு உயிரினங்கள்’ பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்